எய்ம்ஸ் செங்கல்லை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி..!

Published : May 02, 2021, 06:22 PM IST
எய்ம்ஸ் செங்கல்லை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த உதயநிதி..!

சுருக்கம்

தமிழகத்தில் திமுக தனிபெரும் கட்சியாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து எய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக தனிபெரும் கட்சியாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து எய்ம்ஸ் எழுத்துகள் உள்ள செங்கல்லை வழங்கி மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்தார். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தமிழகம் முழுவதும் 75 இடங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 156 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. அதேபோல், அதிமுக 78 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு தேவையான 117 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் திமுக முன்னிலை வகிப்பதால் வெற்றி வாய்ப்பு  திமுகவிற்கு பிரகாசமாகியுள்ளது. 

இந்நிலையில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலினுக்கு எய்ம்ஸ் எழுத்துகள் எழுதப்பட்ட செங்கல்லைப் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் சுமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!