அடேங்கப்பா !! அதிரவைத்த திமுக... அடுத்தடுத்து வெற்றி வாகை சூடிய வேட்பாளர்கள் பட்டியல் இதோ...!

By Kanimozhi PannerselvamFirst Published May 2, 2021, 5:57 PM IST
Highlights

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை முதலே திமுக கூட்டணி முன்னணி வகித்து வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் இதுவரை 24 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 136 இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 
 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை முதலே திமுக கூட்டணி முன்னணி வகித்து வருகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் இதுவரை 24 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 136 இடங்களில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம் இதோ... 

  • சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி 

 

  • தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் 55 ஆயிரத்து 334 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. 

 

  • நாகையில் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவனை விட 7,328 வாக்குகள் அதிகம் பெற்று விசிக வேட்பாளர் ஆளூர் ஷா நவாஸ் வெற்றி 

 

  • ராஜபாளையத்தில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்க பாண்டியன் 3,652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

 

  • வேலூரில் திமுக வேட்பாளர் கார்த்திகேயன் 8,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

 

  • கிள்ளியூரில் அதிமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜுட்தேவ்  45,071 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அவரை விட 53,650 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜேஷ்குமார் 98,721 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

 

  • கீழ்பெண்ணத்தூரில் திமுக வேட்பாளர் பிச்சாண்டி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் செல்வகுமாரை விட 26 ஆயிரத்து 787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

 

  • திட்டக்குடியில் திமுக வேட்பாளர் கணேசன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பெரியசாமியை விட  20,929 வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 

 

  • பரமக்குடியில் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரை விட 12, 528 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் முருகேசன் அமேக வெற்றி பெற்றுள்ளார். 

 

  • தியாகராய நகரில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி , நெல்லை பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வஹாப்,  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக் குமார், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் வெற்றி அடைந்துள்ளனர். 

 

  • ஆலந்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் தா.மோ அன்பரசன் , அதிமுக வேட்பாளர் வளர்மதியை விட 39,837 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி. 

 

  • பெரம்பலூரில் திமுக வேட்பாளர் பிரபாகரன் 31 ஆயிரத்து 036 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

 

  • சங்கரன் கோவிலில் திமுக வேட்பாளர் ராஜா 21 ஆயிரத்து 165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 

  • திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனை விட 25 ஆயிரத்து 263 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி 

 

  • திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் க.பொன்முடி தன்னை எதிர்த்து நின்ற பாஜக வேட்பாளர் கலிவரதனை விட 59 ஆயிரத்து 680 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்துள்ளார். 

 

  • திருச்சி லால்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் சவுந்திரபாண்டியன் வெற்றி 
click me!