அண்ணா நகர், கலைஞர் நகர் வரிசையில் தற்போது உதயமாகி இருக்கிறது ‘உதயா நகர்’.
உதயநிதி அரசியலுக்கு வருவாரா வர மாட்டாரா என்ற விவாதம் எழுந்து கொண்டிருந்த போதே தடாலடியாக கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வெறும் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. எந்தவித கீழ் பொறுப்புகளும் வகிக்காமல் ஒரே நாளில் இளைஞரணி எனும் மிகப்பெரிய பொறுப்பை கொடுத்தது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும்.2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
undefined
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இச்சூழலில் தான் உதயநிதி அமைச்சராக வேண்டும் என திமுக அமைச்சர்கள் சொல்லிவைத்தாற் போல கூறி வருகின்றனர். கூட்டத்தில் ஒருசிலர் துணை முதலமைச்சர் ரேஞ்சுக்கு கூவி கொண்டிருக்கிறார்கள். மேல் மட்டத்திலேயே இந்த நிலை என்றால் கடைக்கொடி தொண்டர்கள், அவர்களுக்கு முன்னால் இருக்கும் வட்ட, மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உதயநிதி மகன் இன்பநிதி வரை இறங்கி அடித்து வருகிறார்கள்.
திமுகவின் கோவை மாவட்ட பூத் முகவர்கள் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள் என்று பேசிய நிலையில், கொங்கு மக்கள் அவர் மீது பாசத்தைப் பொழியும் விதமாக கோவையில் ஒரு ஏரியாவுக்கே உதயநிதி பெயரை வைத்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போனது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களும் ஏன் வாக்களிக்காமல் போனோம் என்று வருந்தும்படி அனைவருக்குமான நல்லாட்சி நடைபெறும் என்று கூறினார். வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவையில் அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கோவை மாவட்டத்தில் பூத் கமிட்டி விரிவாக்கம் செய்து 25,000 பேர் கலந்துகொண்ட கோவை மாவட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தை மாநாடு போல நடத்திக் காட்டினார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, தேர்தலில் கோவை மக்களின் வாக்குகளை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜியை டேக் செய்து ட்வீட் செய்தார்.
கோவை கோவை மாவட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள் என்று நகைச்சுவையாக கூறினார். தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்காததால் கோவை மக்களை குசும்பு பிடித்தவர்கல் என்பதா என்று அதிமுகவினர் உதயநிதியின் இந்தப் பேச்சை அவருக்கு எதிராக திசை திருப்ப முயற்சித்தனர். கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே அர்ச்சுணன், உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைவிட்டார்.
கோவை மக்கள் குசும்பு பிடித்தவர்கள் என்ற உதயநிதியின் நகைச்சுவை பேச்சு அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக கொங்கு மக்கள் உதயநிதி மீது பாசத்தைப் பொழிந்து இருக்கிறார்கள். கோவையில் ஒரு ஏரியாவுக்கு அவருடைய பெயரை வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயரை ஊர்களுக்கு தெருக்களுக்கு ஊரின் ஒரு பகுதிக்கு வைப்பது என்பது வழக்கமான ஒன்று.
பெரியார் நகர், அம்பேத்கர் நகர், காந்தி நகர், காமராஜர் நகர், கக்கன் நகர், பசும்பொன் முத்துரமாலிங்க தேவர் நகர், அண்ணா நகர், ஜீவா நகர், கலைஞர் நகர், எம்.ஜி.ஆர் நகர், ஜெ. ஜெ. நகர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில், கோவையில் ஒரு ஏரியாவுக்கே உதயா நகர் என்று உதயநிதி பெயர் வைத்துள்ளனர். கோவை மாவட்டம், தோலம்பாளையம் ஊராட்சியில் சீங்குளி என்ற பகுதிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் பெயரை உதயா நகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் காரமடை ஒன்றியத்தில் உள்ள தோலம்பாளையம் கிராமம் உள்ளது. காரமடையில் இருந்து ஆனைக்கட்டி பகுதி நோக்கி செல்லும் மலைப்பாதையில் உள்ள இந்த கிராமத்தில், சீங்குளி என்ற பகுதியில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சீங்குளி பகுதியில்தான், உதயநிதியின் பெயர் சூட்டப்பட்ட உதயா நகர் உருவாகியுள்ளது.
அப்பகுதிக்கு உதயாநகர் என்று பெயர் சூட்டப்பட்டதை அறிவிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படங்கள் இடம்பெற்ற பேனரில் உதயா நகர் என்று அச்சிடப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊர்கள், தெருக்களுக்கு பெயர் வைக்கப்பட்ட திமுக தலைவர்களின் பெயர்களின் வரிசையில் உதயநிதியின் பெயரும் சேர்ந்துள்ளது.
உதயநிதியின் பெயர் வைக்கப்பட்ட முதல் ஊர் என்று கொங்கு மக்கள் பாசத்தைப் பொழிந்துள்ளனர். உதயநிதி பெயர் வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், திமுகவைச் சேர்ந்த தோலம்பாளையம் ஊராட்சித் தலைவர் இப்பகுதிக்கு உதயா நகர் என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்தனர். நாளுக்கு நாள் திமுக உபிக்களின் தொல்லை அதிகரித்து வருவதாக இணையத்தில் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.