TTV Dhinakaran: அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.. பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.தினகரன்.!

Published : Jan 01, 2022, 09:50 AM IST
TTV Dhinakaran: அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார்.. பங்கமாய் கலாய்க்கும் டிடிவி.தினகரன்.!

சுருக்கம்

இலக்கை அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம். தேர்தல் தோல்விகளால் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்தால் அது அவர்களது தவறு. நாங்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இயக்கம் அமமுக கிடையாது. வரும் நகராட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். 

6 மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்தார்களோ அதை எல்லாம் ஆளுங்கட்சியான பிறகு தற்போது ஆதரிக்கிறார்கள் என டி.டி.வி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

தஞ்சையில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இலக்கை அடையும் வரை நாங்கள் துவண்டு போக மாட்டோம். தேர்தல் தோல்விகளால் நாங்கள் தோற்று விட்டோம் என்று நினைத்தால் அது அவர்களது தவறு. நாங்கள் ஒரு சமூகப் பொறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் . அரசியலுக்காக எது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இயக்கம் அமமுக கிடையாது. வரும் நகராட்சி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். 

மோசடி புகாரில் போலீசாரால் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஓடி ஒளிவது நல்லதல்ல. தைரியமாக சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. கொரோனா தொற்று சமூக பரவலாக ஆகிவிட்டது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறி வரும் நிலையில் தமிழக முதல்வர் தஞ்சை, திருச்சியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். இது எந்த விதத்தில் நியாயம்.

இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல் மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் நீதிமன்றத்தில் சென்று தான் தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மக்களுடைய மறதிதான் திமுகவின் மூலதனம். எதையெல்லாம் ஆறு மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்தார்களோ அதை எல்லாம் தற்போது ஆதரிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தங்க நகைக்கடனை அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும். அண்ணன் எடப்பாடி ஆட்சியில் எதையெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் தாண்டி தற்போது மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். அண்ணன் எடப்பாடி வழியில் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என கூறினார்.

முன்பு கருப்புக்கொடி காட்டி GO Back Modi என சமூக வலைதளங்களில் டிரெண்டாகி கொண்டிருந்தது. தற்போது அதுவே WelCome Modi என்றாகிவிட்டது. பிரதமர் மோடி என்றைக்குமே பகையாளி அல்ல. தமிழ்நாடு மக்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் கொடுக்க வேண்டும் என  டி.டி.வி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்