சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு சீட்டும்.. இரட்டை இலையும் போதும்... எம்எல்ஏ கருணாஸ்..!

Published : Jan 24, 2021, 03:34 PM IST
சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு சீட்டும்.. இரட்டை இலையும் போதும்... எம்எல்ஏ கருணாஸ்..!

சுருக்கம்

சட்டமன்ற தேர்தலில் 2 சீட்டுகள் கேட்க உள்ளோம். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் எனவும் எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் 2 சீட்டுகள் கேட்க உள்ளோம். மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் எனவும் எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.

திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல , அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. 

ஆனால், வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறோம். தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்கவுள்ளோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயாராகவுள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். 

மேலும், அரசியலை பொறுத்தவரை உண்மையில் நான் ஹீரோ, பல ஹீரோக்கள் அரசியலில் காமெடியனாக உள்ளனர். சின்னம்மா சசிகலா அவர்கள் 27ம் தேதி விடுதலை ஆக இருப்பதை எங்கள் சமூகம் மட்டுமல்லாது, உண்மையான அதிமுகவினரும் வரவேற்பார்கள். அவரை பிடித்தவர்கள் அவரோடு செல்வார்கள். கட்சியில் சலசலப்பு ஆகுமா என்ற யூகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!