கமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..!

Published : Jan 24, 2021, 01:37 PM IST
கமல் அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் இதை செய்தால் போதும்... கார்த்தி சிதம்பரம் அதிரடி சரவெடி..!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யம் தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய  எம்.பி. கார்த்தி சிதம்பரம்;- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவருடன் உயிரிழந்த மற்ற தமிழர்களையும் யாரும் பேசுவது கிடையாது என குறிப்பிட்டார். மேலும், தண்டனை வழங்கப்பட்டவர்கள், ஒரு காலத்திற்கு பிறகு சட்டரீதியாக விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

தொடர்ந்து பேசிய அவர், காவல்துறையினரிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் பாஜகவில் தஞ்சமடைகின்றனர். கமல் தனித்து நின்று தேர்தலை சந்தித்தால் சொற்ப வாக்குகளையே பெறுவார். மதச்சார்பின்மையை சார்ந்திருக்கும் கமல் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். கமல் தொடர்ந்து அரசியலில் நீடிக்க வேண்டுமென்றால் சாதுர்யமான முடிவுகளை எடுக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
 
PREV
click me!

Recommended Stories

திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு
நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!