காலியாகும் டி.டி.வி.தினகரன் அணியின் அடுத்த 2 விக்கெட் …. டீல் பேசி முடித்த அமைச்சர் தங்கமணி !!

By Selvanayagam PFirst Published Dec 18, 2018, 7:01 AM IST
Highlights

அம்மா மக்கள் முன்னனேற்றக் கழகத்தின் முக்கிய நபராக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென திமுகவுக்கு தாவிய நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களான தங்கத் தமிழ்செல்வன் மற்றும் கதிர்காமு ஆகியோர் அதிமுகவுக்கு தாவ தயாராகிவிட்டனர். அமைச்சர் தங்கமணி அவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து டீல் பேசி முடித்த தகவல் தற்போது அம்பலாகியுள்ளது.

அண்மையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தது குறித்து கருத்துத் தெரிவித்த தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி அமமுகவை  விட்டு போனது கூட வருத்தமில்லை, ஆனால் திமுகவில் சேர்ந்தது தான் தனக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியிருந்தார். மேலும் அவர் திமுகவுக்கு போவதற்கு பதில் அதிமுகவிற்கு கூட அவர் போயிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் தங்க தமிழ்செல்வன் மற்றும் கதிர்காமு ஆகியோர் தற்போது அதிமுகவுக்கு தாவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் கதிகாமு ஆகியோர் கடந்த வாரம், சென்னை  எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலுக்கு சென்று காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த அமைச்சர் தங்கமணி, 2 மணி நேரத்துக்கு மேலாக அவர்களுடன் டீல் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அமைச்சர்  தங்கமணி, ’அமமுகவைவிட்டு விலகி அதிமுகவுக்கு வந்துவிடுங்கள், உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை செய்து தர தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

ஏற்கனவே தங்கதமிழ் செல்வனுக்கு அமைச்சர் பதவி தருவதாக இருந்தது, நீங்கள்தான் இப்படி கெடுத்துக் கெண்டடீர்கள் என அமைச்சர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை.  தேர்தல் வந்தால், நீங்க போட்டியிட்ட அதே தொகுதிகளில் ரெண்டு பேரும் போட்டியிடுங்க. செலவை பற்றி கவலை வேண்டாம். நாங்க பார்த்துக்குறோம். ஜெயிச்சதும் உங்களுக்கு அமைச்சர் பதவி தேடி வரும். அதுக்கு நான் கியாரண்டி என ஆசை காட்டியுள்ளார்.

ஆனால் அதற்கு பதில் அளித்த  தங்க தமிழ்ச்செல்வன், நாங்க ரெண்டு பேருமே ஓபிஎஸ்ஐ எதிர்த்துதான் அரசியல் பண்ணிட்டிருக்கோம்,  அவரு எங்களை வளர விடமாட்டார் என தெரிவித்துள்ளார்.

இல்ல அப்படி எல்லாம் இல்லை, இப்போ அவரு கோபம் எல்லாம் தீர்ந்து நல்ல மனநிலையில் இருக்கிறார், உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதற்கு நன் கியாரண்டி என கூறி, உடனடியாக ஓபிஎஸ்க்கு போன் போட்டு தங்கதமிழ் செல்வன் கையில் கொடுத்து பேச வைத்து சமாதானம் செய்ததுள்ளார். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க என் கூறிவிட்டு தங்க தமிழ்செல்வன் அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இதையடுத்து நேராக சென்று  தினகரனை சந்தித்தித்த அவர்கள், இது குறித்து வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து தான் 12 தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு தினகரன் பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்திருக்கிறார்கள்.

அங்கும் கூட  செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. 12பேரும் வெளியே வந்த பிறகு தினகரன் மட்டும் 20 நிமிடங்கள் சசிகலாவுடன் தனியாகப் பேசிவிட்டு வந்திருக்கிறார். மேலும் பெங்களூரு ஹோட்டலில் வைத்து தங்க தமிழ்ச்செல்வனை சமாதானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

ஆனால் தங்கதமிழ்செல்வன் மற்றும் கதிர்காமு ஆகியோர் அதிமுகவுக்கு தாவும் மனநிலைககு வந்துவிட்டதாகவும் இதற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டதாகவுட்ம தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

click me!