ராகுல் கூட ஒட்டிங்க்ஸ் உரசிங்ஸில் ஸ்டாலின்: செந்தில்பாலாஜியை புகழ்ந்து தள்ளும் அமைச்சர்.

By thenmozhi gFirst Published Dec 17, 2018, 7:16 PM IST
Highlights

தி.மு.க. கூட்டணி என்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்ட கூட்டணி. சந்திரபாபு நாயுடுவிடம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் வேண்டும்! என்று கேட்க முடியுமா?: என்று பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். 

ராகுல் கூட ஒட்டிங்க்ஸ் உரசிங்ஸில் ஸ்டாலின்: செந்தில்பாலாஜியை புகழ்ந்து தள்ளும் அமைச்சர். 


*    தி.மு.க. கூட்டணி என்பது சந்தர்ப்பவாதத்தின் உச்சகட்ட கூட்டணி. சந்திரபாபு நாயுடுவிடம், தி.மு.க. தலைவர் ஸ்டாலினால் ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் வேண்டும்! என்று கேட்க முடியுமா?: என்று பேசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். 
(தல, அது சரிதான். பட், உங்க கழகத்தோட துணை ஒருங்கிணைப்பாளர் தானே தமிழக முதல்வர். அவரை ’கஜா புயல் தாக்கிய பகுதிகளை பார்வையிடாமல் பிரதமர் புறக்கணிப்பது ஏன்? நிதி வழங்காதது ஏன்? நீதி வேண்டும்.’ அப்படின்னு ஒரு இஸ்டேட்டுமெண்டு விடச்சொல்லுங்களேன் பார்ப்போம். விடலேன்னா நீங்களும் சந்தர்ப்பவாதிகள்தான். எப்படி சவுகரியம்?)

*    கருணாநிதிக்கும் எனக்கும் உண்டான தொடர்பு, உலகம் அறியும். சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்றுதான் அதை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை! என கமல்ஹாசன் பேலன்ஸ் செய்து பேசியுள்ளார். 
(உங்களோட மக்கள் சேவை உள்ளத்தை  உலகம் அறியும், அதுக்கு அரசியலுக்கு வந்துதான் மக்கள் சேவை செய்யணும்னு அவசியமில்லை! அப்படின்னு  எங்கிருந்தோ யாரோ கூவுறாங்கண்ணே.)

*    பிரதமர் வேட்பாளராக  தமிழகத்தில் இருந்து ராகுல் பெயரை நான் முன்மொழிகிறேன். ராகுல் காந்தியே வருக! நாட்டுக்கு நல்லாட்சி தருக!: என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 
(அப்புறம் தளபதி, ராகுல் கூட ஒரே ஒட்டிங்க்ஸ் உரசிங்ஸ்தான் போல! ஜெர்க்கினை போட்டுக்கிட்டு நார்த் இண்டியா டூர்லேயே இருக்கீங்க. இட்லிய மறந்தாச்சு, ஒரே சப்பாத்தி சப்ஜிதானா?)

*    செந்தில்பாலாஜி, செல்வகணபதி, ரகுபதி இவங்களெல்லாம் அ.தி.மு.க.வுல இருக்குறப்ப ஊழல் புகார் சொன்ன ஸ்டாலின், அப்புறம் அவங்களை இணைச்சுகிட்டு அரசியல் பண்றார். இது எப்படி?: என்று செம்ம டவுட்டை தட்டிவிட்டிருக்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. 
(அண்ணே, பன்னீர்செல்வம் கோஷ்டி யுத்தம் நடத்துனப்ப அவங்களை கழுவிக் கழுவி ஊத்திட்டு, அப்புறமா கைகுலுக்கி துணை முதல்வர் ஆக்கலையா நீங்க! அதேமாதிரிதான் இதுவும் ஒரு கணக்குண்ணே. இன்னும் பச்சபுள்ளையாவே இருக்கீங்க போங்க!)

*    தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் போக்குவரத்துக் கழகம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதை அதன் பின் வந்த அ.தி.மு.க. அரசு மீட்டெடுத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தது! என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம். 


(ஆஹா! தி.மு.க. ஆட்சி முடிஞ்சு அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் இந்த துறை அமைச்சரானவர் செந்தில்பாலாஜி. கட்சிகள் தாவிட்டாலும் அவரை எவ்வளவு பெருமையா பேசுறீங்கண்ணா! அவர் மேலே இம்பூட்டு பாசத்தை இவ்வளவு நாளும் மறைச்சு வெச்சா சண்டை போட்டீங்க?)

click me!