என்னுடைய வளர்ச்சியை கண்டு இவர்கள் அஞ்சுகிறார்கள்... கம்பீரம் குறையாத தினகரன் நக்கல் பேச்சு!

By vinoth kumarFirst Published Dec 17, 2018, 4:14 PM IST
Highlights

அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை என்று தகுதிநீக்க எம்எல்ஏக்களுடன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபின் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.

அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை என்று தகுதிநீக்க எம்எல்ஏக்களுடன் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்தபின் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

 

பெங்களூரு சிறையில் அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடன் அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று  சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவருடன் தங்க.தமிழ்ச்செல்வன், கோதண்டபாணி, கதிர்காமு, உமா மேஸ்வரி, பார்த்திபன், ஏழுமலை  உள்ளிட்ட தகுதிநீக்கம் செய்யப்பட்ட 12 எம்எல்ஏக்கள் தினகரனுடன் சென்றிருந்தனர். 

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி;- அமமுகவில் யாரும் அதிருப்தியில் இருப்பதுபோல் தெரியவில்லை. என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அஞ்சுகிறது. இதில் இருந்தே நாங்கள் குறுகிய காலத்தில் எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளோம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 

சிலர் விலகிவிடுவதால் கட்சி போய்விடும் என்றால், உலகத்தில் எந்த கட்சியும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். அமமுகவில் இருந்து யாரும் விலகி சென்று அதிமுகவில் சேர மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் முதல்கோணம் முற்றிலும் கோணம் என டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

click me!