இரண்டு துணை முதலமைச்சர்களை நியமிக்க முதலமைச்சர் அதிரடி முடிவு !! திடீர் திருப்பம் !!

By Selvanayagam PFirst Published Nov 27, 2019, 8:15 PM IST
Highlights

மகாராஷ்ட்ரா முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்ரே நாளை பொறுப்பேற்க உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கட்சிகளிடையே  முதலமைச்சர் தொடர்பாக ஏற்பட்ட மோதலையடுத்து அவர்களிடையே இருந்த உறவு முறிந்து போனது. இதையடுத்து சிவசேனோ  தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க முடிவு செய்தது.

ஆனால் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாருடன் கூட்டணி வைத்துக் கொண்ட பாஜக ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராகவும்இ அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆனால் உச்சநீதிமன்றம் உடனடியாக தேவேந்திர பட்னவிஸை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது. ஆனால் அது முடியாது என்பதால் அவர் பதவியேற்ற 80 நிமிடத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைகிறது. 

இது தொடர்பாக மும்பையில் நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகவும் , கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இன்று அனைத்து எம்எல்ஏக்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

நாளை உத்தவ் தாக்ரே முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொள்கிறார்.. அவருடன் காங்கிரஸைச் சேர்ந்த பாலாசாகேப் தோரத், என்சிபியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது

click me!