உதயநிதியின் பதவிக்கு ஒரேடியாய் வேட்டு வைத்த திருமா!: கடுப்பான ஸ்டாலின்... விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற திட்டம்...!

By Vishnu PriyaFirst Published Nov 27, 2019, 6:45 PM IST
Highlights

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியிலிருக்கும் முக்கிய கட்சியான விடுதலைசிறுத்தைகள் செய்திருக்கும் ஒரு காரியமானது, ஸ்டாலினை அநியாயத்துக்கு கடுப்பாக்கி இருக்கிறது! என்கிறார்கள். 

மு.க.ஸ்டாலின் வகித்த பதவிகளிலேயே அவருக்கு மிகவும் இஷ்டமானது சென்னை மேயர் பதவிதான். பொதுமக்களிடம் மிக நெருங்கிப் பழகிட வாய்ப்புடைய பகுதியாக அதை அவர் நினைத்தார். அப்பதவியிலிருந்த போதுதான் ஸ்டாலினுக்கு பெரியளவில் ஜனரஞ்சக அந்தஸ்து கிடைத்தது. மேயர் பதவியில் ஜொலித்த பின் தான் உள்ளாட்சி துறை, துணை முதல்வர் என்று முக்கிய கிரீடங்கள் அவரை வந்து சேர்ந்தன. இதை தனக்கான மிகப்பெரிய சென் டிமெண்டாக நினைக்கிறார் அவர். இதே சென்டிமெண்ட் தனது மகன் உதயநிதிக்கும் அமைய வேண்டுமென விருப்பப்பட்டார். அதனல் உதயநிதியை, கழக இளைஞரணி செயலாளராக்கி இருக்கும் ஸ்டாலின், அடுத்து உள்ளாட்சி தேர்தலில் அவரை சென்னை மேயர் பதவிக்கு நிற்க வைக்கும் திட்டத்திலும் இருந்தார். 


இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியிலிருக்கும் முக்கிய கட்சியான விடுதலைசிறுத்தைகள் செய்திருக்கும் ஒரு காரியமானது, ஸ்டாலினை அநியாயத்துக்கு கடுப்பாக்கி இருக்கிறது! என்கிறார்கள். ஏற்கனவே திருமாவுக்கும், ஸ்டாலினுக்கும் ஆகவே ஆகாது. கூட்டணியில் ஒரு தலித் கட்சி இருக்க வேண்டும்! அதனாலும், தனது அப்பா கருணாநிதியின் மனதுக்கு பிடித்த நபர் என்பதாலும்தான் திருமாவையும், அவரது விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் கூட்டணியில் இணைத்தார் ஸ்டாலின். 
திருமாவுக்கும், ஸ்டாலினுக்கும் இடையில் பர்ஷனலாக ஆயிரம் முட்டல் மோதல்கள், ஈகோ யுத்தங்கள் இருந்தாலும் கூட அதையெல்லாம் தாண்டி அவர்கள் அரசியலில் கைகோர்க்க காரணம் மேற்சொன்னவைகளே. என்னதான் கூட்டணியில் இருந்தாலும் கூட இருவருக்குள்ளும் அப்படியொன்றும் ஒத்துப் போகாது. இந்த நிலையில், இந்து ஆலயங்களை பற்றி திருமா சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விஷயத்தால் தி.மு.க.வுக்கும் சேர்த்து மக்கள் மனதில் அவப்பெயர் உருவாகி உள்ளது. இதனால் வி.சி.க. மீது அதிருப்தியில் இருந்தது தி.மு.க.இந்த நிலையில்தான் திருமா செய்திருக்கும் ஒரு காரியம் ஸ்டாலினை ரத்தம் கொதிக்க வைத்துள்ளது! என்கிறார்கள் விமர்சகர்கள். 


அப்படி என்ன செய்துவிட்டார் திருமா?இதுபற்றி விளக்கும் விமர்சர்கள் “உதயநிதியை சென்னை மேயர் ஆக்க வேண்டுமென்பதே ஸ்டாலின் ஆசை. ஆனால் அதற்கு ஆப்படிக்கும் வகையில்,  திருமாவளவனும் அவரது கட்சியை சேர்ந்த இன்னொரு எம்.பி.யான ரவிக்குமாரும் சமீபத்தில்  தமிழக முதல்வர் எடப்பாடியாரை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து ஒரு மனுவை கொடுத்தனர். அதில் ‘சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலனித்தவருக்கு ஒதுக்கிட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுதான் ஸ்டாலினை மனம் நோகவும், ஆத்திரமடையவும் வைத்துள்ளது. தன் மகனை மேயர் தேர்தலில் நிறுத்த தான் முடிவு செய்திருப்பது, கூட்டணி கட்சியின் தலைவர் என்ற முறையில் நன்கு தெரிந்தும் கூட திருமா இப்படி செயல்பட்டிருப்பது அக்கிரம உச்சம்! வேண்டும் என்றே திருமா இப்படி உரசுகிறார்! ஒரு முறை இப்படி தலித்துகளுக்கு இதை ஒதுக்கினால் இன்னும் சில தேர்தல்களுக்கு தலித்துகளுக்கே தொடரும். எனவே உதயநிதி மேயராகும் வாய்ப்பில் ஒரேடியாய் மண் போட முயற்சித்திருக்கிறார் திருமா! என்பதே ஸ்டாலினின் கடுப்பு.

கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் திருமாவுக்கு வந்துவிட்டது, நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் தோளில் அமர்ந்து ரெண்டு எம்.பி. சீட்களை வென்ற திருமா, எதிர்வரும் தேர்தலில் அணி மாறிட தயாராகிவிட்டார், அதன் வெளிப்பாடே இந்த சீண்டல்! என ஸ்டாலின் நினைக்கிறார். அதனால் திருமாவே வெளியேறும் முன், இவர்களே அவரை நிந்தித்து வெளியே அனுப்பியது போல் ஒரு சூழலை உருவாக்கிட திட்டமிட்டுள்ளார். அப்படியானால்தான் அ.தி.மு.க. அணியிலும் திருமாவுக்கு பெரிய வரவேற்பில்லாமலும், குறைந்த சீட்களும் கிடைக்கும்! என்பதே ஸ்டாலினின் பிளான்.எனவே தி.மு.க. கூட்டணியிலிருந்து வி.சி.க. வெளியேறும் காட்சி விரைவில் நடக்கும்.” என்கிறார்கள்.ஆனால் அரசியல் பார்வையாளர்களோ ‘இது பொய்யான வாதம். முதல்வரை திருமா சந்திக்க செல்லும் முன், கூட்டணி தலைவரான ஸ்டாலினிடம் சொல்லிவிட்டே சென்றார். இப்படியொரு கோரிக்கை வைப்பதையும் தெரிவித்திருந்தார். ஸ்டாலின் அதற்கு ஒப்புக் கொண்டார். காரணம், உதயநிதியை மேயர் பதவியில் நிறுத்தும் எண்ணமெல்லாம் ஸ்டாலினுக்கு இல்லை, ஒருவேளை அப்படி இருந்தாலும் கூட திருமா மனு கொடுத்த உடனே சென்னை மேயர் பதவியை தலித்களுக்கு எடப்பாடியார் ஒதுக்கிவிடுவாரா! என்ன? எனும் எண்ணம்தான். 
எனவே தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமுமில்லை.” என்கிறார்கள். 
 

click me!