இரண்டரை மணி நேரம்..! சராமாரி கேள்வி..! திணறிப்போன அமைச்சர்கள்..! மு.க.ஸ்டாலின் புது அவதாரம்..!

By Selva KathirFirst Published Aug 5, 2021, 10:15 AM IST
Highlights

தமிழகத்தை பொறுத்தவரை அமைச்சரவை கூட்டம் என்பது சம்பிரதாயத்திற்கு ஒன்றானதாகவே இதுவரை இருந்துள்ளது. கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டிய விஷயங்களை முதலமைச்சர் அலுவலகம் இறுதி செய்துவிடும். அதனை கூட்டத்தில் சமர்பித்து ஒப்புதல் பெறுவது மட்டுமே அண்மைக்காலமாக அமைச்சரவை கூட்டத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளாக இருந்து வந்தது. 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்விகளால் ஜூனியர் அமைச்சர்கள் மட்டும் அல்லாமல் சீனியர் அமைச்சர்களையும் திணற வைத்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை அமைச்சரவை கூட்டம் என்பது சம்பிரதாயத்திற்கு ஒன்றானதாகவே இதுவரை இருந்துள்ளது. கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டிய விஷயங்களை முதலமைச்சர் அலுவலகம் இறுதி செய்துவிடும். அதனை கூட்டத்தில் சமர்பித்து ஒப்புதல் பெறுவது மட்டுமே அண்மைக்காலமாக அமைச்சரவை கூட்டத்தில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகளாக இருந்து வந்தது. விவாதம், ஆலோசனை போன்றவை எல்லாம் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நடைபெறுவது இல்லை என்று கூறி வந்தார்.

இப்படி எதிர்பார்த்து தான் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்த அமைச்சரவை கூட்டத்திற்கு அமைச்சர்கள் சென்று இருந்தனர். ஆனால் காலை 11 மணி அளவில் தொடங்கிய கூட்டம் பிற்பகல் ஒன்றரை மணி வரை நடைபெற்றது. அதாவது சுமார் இரண்டரை மணி நேரம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. வழக்கம் போல் முதலமைச்சர் அலுவலகம் இறுதி செய்த அம்சங்களுக்கு ஒப்புதல் பெறவே அமைச்சரவை கூட்டம் என்று நினைத்து அமைச்சர்கள் வந்திருந்தனர். ஆனால் கூட்டம் இதுவரை இல்லாத வகையில் நடந்துள்ளது.

சீனியர் அமைச்சரான துரைமுருகன் தொடங்கி ஜூனியர் அமைச்சரான மதிவேந்தன் வரை அனைத்து அமைச்சர்களிடமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரியாக கேள்வி எழுப்பியதாக சொல்கிறார்கள். அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு போன்ற ஒரு சிலர் மட்டுமே முதலமைச்சரின் கேள்வியில் இருந்து தப்பியதாக சொல்கிறார்கள். அவர்களிடமும் கூட அவர்கள் துறை சார்ந்த சில விவரங்களை முதலமைச்சர் கேட்டதாக கூறுகிறார்கள். உடனடியாக அதற்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகளை அவர்கள் உதவிக்கு அழைத்ததாகவும் சொல்கிறார்கள். கூட்டத்தில் ஒரு சில அமைச்சர்கள் முதலமைச்சரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியதை பார்க்க முடிந்ததாக சொல்கிறார்கள்.

அதிலும் டிரான்ஸ்பர் விவகாரத்தில் தான் அமைச்சர்கள் பலரும் முதலமைச்சரின் அதிருப்திக்கு ஆளானதாக கூறுகிறார்கள். மேலும் அதிமுக ஆட்சியில் இருந்த சென்ற பிறகும் அவர்கள் தொடங்கி வைத்த முறையிலேயே சில துறைகள் இயங்குவது தொடர்பாகவும் முதலமைச்சர் தனது கோபத்தை வெளிப்படுத்தியதாக சொல்கிறார்கள். மேலும் சென்னை மாநகராட்சியில் பழைய முறையிலான பாக்ஸ் டெண்டர் கோரப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் முதலமைச்சர் சீரியசாக பேசியதாக கூறுகிறார்கள். மேலும் ஒவ்வொரு துறையிலும் இதுவரை நிறைவேற்றப்பட்ட பணிகள், அடுத்த கட்ட திட்டம் குறித்து முதலமைச்சர் கேள்வி மேல் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு எந்த அமைச்சரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்கிறார்கள்.

இறுதியில் அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு அமைச்சர்களும் தங்கள் துறை சார்ந்த புதிய திட்டத்துடன் வர வேண்டும் என்கிற உத்தரவுடன் கூட்டம் நிறைவடைந்ததாக சொல்கிறார்கள். அதாவது சுமார் இரண்டரை மணி நேரம் அமைச்சர்களை அழைத்து லெப்ட் அன்ட் ரைட் வாங்கி தனது புதிய அவதாரத்தை முதலமைச்சர் காட்டியுள்ளதாக பேசிக் கொள்கிறார்கள்.

click me!