விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம்.?? அடுத்தடுத்து தட்டி தூக்கும் முதல்வர் ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 8:46 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அந்த வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. 

குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என கேள்வி எழுப்பி வரும் நிலையில். விரைவில் அதற்கான திட்டம் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து. அந்த வாக்குறுதிகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் பெண்கள் மற்றும் குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. திமுக ஆட்சியை பிடித்த நிலையில்,குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதி நெருக்கடி காரணமாக செயல்படுத்தாமல் உள்ளது.

இந்நிலையில் அதிமுக , பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுக தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், திமுக தேர்தலுக்காக கொடுத்த வெற்று வாக்குறுதி இது என்றும் கூறி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விரைவில் குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இது குறித்து திமுக அமைச்சர்கள் நிதி நெருக்கடியால் திட்டம் தடைபட்டுள்ள்ளதாகவும். நிதி நிலைமையை ஆராய்ந்து விரைவில் முதல்வர் திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிடுவார் என கூறி வருகின்றனர். அதேபோல் பட்ஜட் வரும் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. 
 

click me!