இனி இஷ்டத்திற்கு தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது.. யாரா இருந்தாலும் இது அவசியம்.. அதிரடி ஆரம்பம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 5, 2021, 9:38 AM IST
Highlights

ஆயிரக்கணக்கான மக்கள், கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வைரஸ் தாக்கம்  படிப்படியாக கட்டுக்குள் வரத் தொடங்கிய நிலையில்,

கேரளா கர்நாடகா உள்ளிட்ட தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இனி பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவோர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்று மற்றும் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 

ஆயிரக்கணக்கான மக்கள், கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் வைரஸ் தாக்கம்  படிப்படியாக கட்டுக்குள் வரத் தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களாக அதன் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மற்றும் திருவிழாக்க்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது, ஒட்டுமொத்த நாட்டின் தொற்று எண்ணிக்கையில் 50% கேரளாவிலிருந்தே பதிவாகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தோற்றி எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. எனவே தமிழக எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டுமென பல்வேறு கட்சியினர் கோரிக்கை வைத்து வந்ததனர். 

இந்நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இனி ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்றும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை வெளி மாநிலத்தில் இருந்து வருவோருக்கு வெப்பமானி பரிசோதனை மட்டுமே மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது ஆர்டிபிசிஆர் சான்று அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு பேருந்து, ரயில், மற்றும் விமானம் மூலம் வருவோர் 72 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும், அதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே அவர்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இந்த கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!