தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க தடை... தோல்வி விரக்தியால் காங்கிரஸ் அதிரடி..!

By vinoth kumarFirst Published May 30, 2019, 12:15 PM IST
Highlights

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாத காலத்திற்கு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என கட்சி தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது. 

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் ஒரு மாத காலத்திற்கு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என கட்சி தலைமை அதிரடியாக அறிவித்துள்ளது.

 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி அறிவித்திருந்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் ஒரு மாதத்திற்கு பங்கேற்க வேண்டாம் என்று  ரன்தீப் சிங் சுர்ஜிவாலா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் டிவி விவாதங்களுக்கு செய்தி தொடர்பாளர்ள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை ஒரு மாதத்துக்கு அனுப்புவதில்லை என காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.  

click me!