கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி... ஸ்டாலினால் ஆட்சியை அசைத்துக்கூட பார்க்க முடியாது? ஓபிஎஸ் இபிஎஸ்சின் ஸ்மார்ட் ஸ்கெட்ச்

By sathish kFirst Published May 30, 2019, 11:41 AM IST
Highlights

ஸ்டாலினோ,தினகரனோ இந்த ஆட்சியை அசைக்க நினைத்தால் தோல்வியில் தான் முடியும் ஏனென்றால் எடப்பாடியின் ராசி அப்படி. மறைந்த முதல்வர்களானா எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவை மிஞ்சும் அளவிற்கு ஸ்மார்ட் மூவ் செய்கின்றனர் எடப்பாடி அண்ட் ஓபிஎஸ்.

அதிமுக தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள  பிளான் எதுவும்போடவில்லை, எதிர்க்கட்சிகளுக்கு ஸ்மார்ட்டாக ரியாக்ட் செய்கிறது. அனால், திமுகவின் மாஸ்டர் பிளான் மொத்தமும் எடப்பாடியின் ராசியால் எல்லாம் தவிடு பொடியாகியுள்ளது, ஜெயலலிதா மறைந்ததிலிருந்து, அதோ இதோ என ஒரு சுமார் 2 வருடங்களை கடந்துள்ளது. ஆனால் தினகரன் மற்றும் திமுகவால் சீண்டிக்கூட பார்க்கமுடியவில்லை. தினகரனின் 18 எம்.எல்.ஏக்கள் தொடங்கி தேர்தல் ரிசல்ட் வரை எதிர்க்கட்சிகளின் வியூகம் தோல்வியிலேயே முடிகிறது.இதெல்லாம் விட கொடுமை என்னன்னா இடைத்தேர்தலில் முடிவும் எடப்பாடிக்கு சாதகமாகவே அமைந்தது.

சபாநாயகர் மீது கடந்த 1ம் தேதி ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த மனுவை சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் கொடுத்தார். இதுகுறித்து  பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர்,  இன்னும் சட்டமன்றம் கூடுவதற்கான தேதி அறிவிக்கப்படவில்லை. சட்டமன்றம் கூடியவுடன் எங்களது நடவடிக்கைகளை பார்ப்பீர்கள், Wait and See எனக் கூறினார். 

இந்நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்சின் பிளான் வியக்க வைக்கிறது, தற்போது சபாநாயகராக இருக்கும் தனபாலை ராஜினாமா செய்யவைத்து அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதுதான்  ப்ளான். இதனால் எப்படி ஆட்சியை காப்பாற்ற முடியும் என நினைக்கலாம்? அந்த இடத்திற்கு வேறொருவரை கொண்டுவருவதன்மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடியாகிவிடும். இதனால் இன்னும் 6 மாதத்திற்கு  பிரச்சனையே இல்லாமல் ஆட்சி நடத்தலாம் என்பது தானாம்.

97 ஆக இருந்த திமுக கூட்டணியின் பலம்  இடைத்தேர்தலுக்கு பிறகு 110 ஆக உயர்ந்துள்ளது. அதிமுக கூட்டணியின் பலம் 123 ஆக குறைந்துவிட்டது. இருந்தாலும்   தனிப்பெரும்பான்மையில்தான் உள்ளோம். ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள உறுப்பினர்களை பொறுத்தவரை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி மீது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் தனபால் மீது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என சுமார் 30 பேர் வரை உள்ளனர். இவர்கள்  மாற்றி ஒட்டு போட்டால் சபாநாயகரை மாற்றவேண்டிய நிலைமை வந்துவிடும்.

அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டுவரும் பட்சத்தில், மாற்றி வாக்களித்துவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும். இவற்றை தடுக்கவே  தனபாலை ராஜினாமா செய்யவைக்க நினைக்கின்றனர். சபா பதவியை பறித்தால் கடுப்பாகும்  தனபாலுக்கு அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்தவும் பிளான் போட்டுள்ளார்களாம்.  ஆக ஸ்டாலினோ,தினகரனோ இந்த ஆட்சியை அசைக்க நினைத்தால் தோல்வியில் தான் முடியும் ஏனென்றால் எடப்பாடியின் ராசி அப்படி. மறைந்த முதல்வர்களானா எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவை மிஞ்சும் அளவிற்கு ஸ்மார்ட் மூவ் செய்கின்றனர் எடப்பாடி அண்ட் ஓபிஎஸ்.

click me!