மோடியை ‘மிமிக்ரி' செய்ய தொலைக்காட்சியில் தடை

 
Published : Oct 26, 2017, 06:26 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
மோடியை ‘மிமிக்ரி' செய்ய தொலைக்காட்சியில் தடை

சுருக்கம்

TV Channels should be stop mimicry of Modi

பிரபல தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பற்றி ‘மிமிக்ரி’ செய்யக்கூடாது என, போட்டியாளர் ஒருவர் எச்சரிக்கப்பட்டார்.

இந்தி தொலைக்காட்சி

ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஷியாம் ரங்கீலா. இவர் பிரபல இந்தி தொலைக்காட்சியான ‘ஸ்டார் ப்ளஸ்’ஸில் நடைபெற்று வரும் ‘தி கிரேட் இந்தியன் லாபர் சேலஞ்' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிறப்பு நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் பற்றி ரங்கீலா கூறியதாவது:-

‘மோடி மிமிக்ரி’க்கு தடை

என்னுடைய மிமிக்ரி திறமையின் காரணமாக நான் அந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பினை பெற்றேன். ஆனால அங்கு என்னுடைய முதல் நிகழ்ச்சியின் பொழுது மோடி மற்றும் ராகுல் இருவரையும் போல பேசி மிமிக்ரி செய்திருந்தேன்.

ஆனால் வேறு ஏதாவது செய்து காட்டுமாறு நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன். பின்னர் நான் மோடி குறித்து மிமிக்ரி எதுவும் செய்யக் கூடாது என்றும், வேண்டுமானால் ராகுல் காந்தி பற்றி மிமிக்ரி செய்யலாம் என்றும் கூறப்பட்டது.

வெளியேற்றம்

நான் வேறு ஒரு நிகழ்ச்சிக்கான ஸ்கிரிப்ட்டை உருவாக்கி கொண்டிருந்த பொழுது, மீண்டும் ஒரு முறை ராகுல் பற்றியும் மிமிக்ரி செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன்.

இறுதியில் நான் உருவாக்கிய ஸ்கிரிப்ட்டினை, இரண்டு நாட்கள் மட்டுமே செய்த ஒத்திகையோடு, எனது சொந்த குரலில் பேசினேன். ஆனால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.

கொடுங்கனவு

இத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய கனவு; ஆனால் இறுதியில் அது பெரிய கொடுங்கனவாக மாறி விட்டது.

இவ்வாறு ஷியாம் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!