டிடிவியிடம் 1 மணிநேரம் விசாரணை - 100க்கும் மேற்பட்ட சரமாரி கேள்விகள்..

 
Published : Oct 26, 2017, 06:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
டிடிவியிடம் 1 மணிநேரம் விசாரணை - 100க்கும் மேற்பட்ட சரமாரி கேள்விகள்..

சுருக்கம்

TTV Tinakaran was interrogated for 1 hour

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனிடம் 1 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. இதில் நீதிபதி டிடிவியிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பினார். 

கடந்த 1996-ம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவினர்  டிடிவி தினகரன் மீது அந்நிய செலாவணி மோசடி வழக்கைப் பதிவுசெய்தனர்.

இந்த வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே அந்நிய செலாவணி வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தினகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரணையை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து குறுக்கு விசாரணை நடைபெற்றது. 

இந்நிலையில், எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

விசாரணக்கு டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது, விசாரணைக்கு முன்பே அமலாக்க துறை கேள்விகளை தரவேண்டும் என தினகரன் கோரியிருந்தார். தினகரன் கோரிக்கைக்கு நீதிபதி மலர்மதி கண்டனம் தெரிவித்தார். 

இதையடுத்து டிடிவி தினகரனிடம்  1 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் 100க்கும் மேற்பட்ட சரமாரி கேள்விகளை நீதிபதி எழுப்பினார். 


 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!