சோவுக்கு இருந்த தில்லு துணிச்சல் இன்று யாருக்குமே இல்லை... துக்ளக் விழாவில் துள்ளிய ரஜினி..!

By vinoth kumarFirst Published Jan 15, 2020, 7:55 AM IST
Highlights

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்;- பத்திரிக்கைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ. 1971-ல் ஈரோட்டில் பெரியார் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினார் அதை தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் செய்தியாக கூட போடவில்லை. ஆனால், தைரியமாக துக்ளக் பத்திரிகையில் அட்டைப் படத்தில் அச்சிட்டு கடுமையாக விமர்சித்து சோ எழுதியிருந்தார் என புகழாரம் சூட்டினார்.  

ஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும் தண்ணீரை கலந்துவிடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்;- பத்திரிக்கைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ. 1971-ல் ஈரோட்டில் பெரியார் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினார் அதை தமிழ்நாட்டு பத்திரிக்கைகள் செய்தியாக கூட போடவில்லை. ஆனால், தைரியமாக துக்ளக் பத்திரிகையில் அட்டைப் படத்தில் அச்சிட்டு கடுமையாக விமர்சித்து சோ எழுதியிருந்தார் என புகழாரம் சூட்டினார்.  

இதையும் படிங்க;- மப்பில் டிரஸே இல்லாமல் நிர்வாணமாக ஆடிய 21 இளம்பெண்கள்... சொகுசு ஹோட்டலில் இரவு முழுவதும் நடந்த கூத்து...!

பொதுவாக முரசொலி கையில் வைத்திருந்தால் திமுக என்பார்கள்; அதேபோல துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். ஊடகங்கள் எப்போதும் பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் பொய் என்னும் தண்ணீரை கலந்துவிடக் கூடாது என்று ரஜினி கூறினார். சோவை போலவே துக்ளக் இதழை தற்போது குருமூர்த்தி நன்றாக வழிநடத்தி கொண்டு செல்கிறார்.

சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர். ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. தற்போதைய சூழலில் சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. இந்நிலையில் சோ போன்ற பத்திரிகையாளர் ஒருவர் அவசியம் தேவை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 

click me!