பகிரங்க மன்னிப்பு அல்லது பதவி நீக்கம்..! காங்கிரசுக்கு கெடு விதித்த திமுக..!

By Selva KathirFirst Published Jan 15, 2020, 7:22 AM IST
Highlights

டெல்லியில் நேற்று எதிர்கட்சிகள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்டியிருந்தார். இந்த கூட்டத்திற்கு பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு உடைய அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மம்தா, மாயாவதி போன்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இது பெரிய விஷயம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய கூட்டாளியான திமுக பங்கேற்கவில்லை. இது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக என அறிக்கை வெளியிட்ட கே.எஸ்.அழகிரி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட வேண்டும் அல்லது அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் நேற்று எதிர்கட்சிகள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்டியிருந்தார். இந்த கூட்டத்திற்கு பாஜகவிற்கு எதிரான நிலைப்பாடு உடைய அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மம்தா, மாயாவதி போன்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இது பெரிய விஷயம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய கூட்டாளியான திமுக பங்கேற்கவில்லை. இது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.

சிஏஏ மற்றும் என்சிஆர் விவகாரங்களில் காங்கிரசுக்கு அவர்களுடைய கூட்டணி கட்சி கூட துணைக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்தார். இந்த அளவிற்கு காங்கிரசுக்கு தேசிய அளவில் தர்மசங்கடம் ஏற்பட காரணம், சோனியா கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது தான். ராகுல் காந்தியை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தது முதல் அனைத்து விஷயத்திலும் காங்கிரசுக்கு திமுக பக்கபலமாக இருந்து வருகிறது.

ஆனால் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட ஒரே அறிக்கை திமுகவை கூட்டணியில் இருந்து கிட்டத்தட்ட வெளியேற்றிவிட்டது என்றே கூறலாம். திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு அதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று கூறி திமுக தலைமை நிலையச் செயலாளர் டி.ஆர்.பாலு அதிர வைத்துள்ளார். டி.ஆர்.பாலுவின் அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால் தற்போதைய சூழலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி இல்லை என்பது தான் உறுதியாகிறது.

திமுக வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட்டணி தர்மம் தொடர்பான அறிக்கைக்கு அழகிரி உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட வேண்டும் அல்லது அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக கெடு விதித்துள்ளதாக சொல்கிறார்கள்.

click me!