
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் மூன்றாவது நாளானா இன்று பேரவையில் கலந்து கொள்ள வந்த டிடிவி சட்டபேரவை வளாகத்தில் டிடிவி தினகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். இதில் திமுக கலந்து கொள்ளவேண்டும் என்றார் ஒரு ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி மட்டும் கூடி சட்டமன்றம் நடத்துவது நல்லதில்லை எனக் கூறினார். திமுக சட்டமன்றம் வரவேண்டுமென தன் விருப்பத்தையும் தெரிவித்தார்.
பின் ரஜினியின் பேச்சைப் பற்றி கேள்வி கேட்ட பொழுது அவரே காலையில புனித போராட்டம் இரத்த போராட்டமாயிடுச்சின்னு பேசுறாரு சாயங்காலம் புனித போராட்டம் தொடர்ந்து போனா சுடுகாடாகிவிடும் ந்னு பேசுறாரு முன்னுக்குப்பின் முரணாகபேசுகிறார்.
அவரெல்லாம் தியானம் எதுக்கு பண்ணுறாரு தியானம் ஆன்மாவுக்கு பண்ணனும், எல்லா பத்திரிக்கையாளர்களும் அவருக்கு ஆதரவாக கேள்வி கேட்பாங்க என ரஜினியை சாடினார் டிடிவி.
சமூக விரோதிகள் காரணம்ன்னு சொல்றீங்க அப்ப பத்திரிகையாளர்கள் யாரு உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேட்கத்தானே செய்வாங்க என ரஜினியை கேலி செய்து தீர்த்துவிட்டார் தினகரன்.