
ஜிப்மர் மருத்துவர் அம்பிகா பிரசாத் பத்ரா தலைமையில் உட்பட 3 மருத்துவ குழு தலைமையில் மறு பிரேத பரிசோதனை நடைபெற்றுவருகிறது உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரழந்தவர்களின் ஏழு பேர்க்கு மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் ஒருவார காலம் குளிர்பதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்தது.
மேலும் ஜிப்மர் மருத்துவர் ஒருவரின் தலைமையில் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும். உடல் பல்வேறு கோணங்களில் எக்ஸ்ரே எடுக்க வேண்டும். பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது. இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனை மதியத்துக்குள் முடியும் என்றும் உடனடியாக உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆட்சியர் கூறியுள்ளார்.
இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுவதால் தூத்துக்குடி நகரம் முழுவது தீவிர பாதுகாப்பு கருதி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மக்கள் வன்முறை சம்பவத்தில் ஈடுபடக்கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளன.