ஆடியோவில் "ஜெயலலிதா" என்ன பேசி உள்ளார் தெரியுமா..? "கோபப்படும் ஒலி"...!

First Published May 31, 2018, 1:15 PM IST
Highlights
WHAT jayalalaitha speaks in audio


ஆடியோவில் ஜெயலலிதா என்ன பேசி உள்ளார் தெரியுமா..?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிருடன் திரும்பவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், ஜே மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஓய்வு  பெற்ற நீதிபதி  ஆறுமுக சாமி தலைமையிலான இந்த  விசாரணை ஆணையத்தில் பல்வேறு  தரப்பினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா பேசிய ஆடியோவை விசாரணை ஆணையம் வெளியிட்டு உள்ளது அதில் ஜெயலலிதா என்ன பேசி உள்ளார் என்பதை இப்போது  பார்க்கலாம்.

ஆடியோ பதிவு செய்த நாள் : 29.9.2016 இல் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் பேசிய இந்த ஆடியோ 52 வினாடிகள் மட்டுமே கொண்டு உள்ளது.

மேலும், ரத்த அழுத்தம் எவ்வளவு என மருத்துவரிடம் ஜெயலலிதா கேட்கிறார். அவருக்கு வைத்தியம் பார்க்கும் பெண் மருத்துவர் ரத்த அழுத்தம் 140 / 80 என்று கூறுகிறார். அதற்கு ஜெயலலிதா ”எனக்கு அது நார்மல் தான்” என்கிறார்.

மேலும், ஜெயலலிதா  பேசும் போது அவர் சிரமப்பட்டு பேசுவதும் , நடுவில் இரும்புவதும் இடம் பெற்று உள்ளது.

மேலும் இந்த ஆடியோவை பதிவு செய்யும் நபரிடம் சற்று கோபப்படும் சவுண்டு கூட  கேட்கிறது

விசாரணை ஆணையம் அமைத்த பின், அவ்வப்போது ஜெயலலிதா குறித்த சில  விஷயங்களை வெளியிட்டு வருவதால் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை திசை திருப்பதான் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

click me!