
ஆளும் கட்சி, எதிர்கட்சி, தேசிய கட்சி என ஒட்டுமொத்த அரசியல் கட்சியையும் பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்றார் சுயேட்சையாக களமிறங்கிய தினகரன். இதில் கொடுமை என்னவென்றால் தேப்பசிட்டை பறிகொடுத்தது எதிர்கட்சி, நோட்டாவிடம் போட்டிபோட்டு திணறியது தேசியக்கட்சியான பாஜக இப்படி தினகரனின் தேர்தல் செயல்பாடு குறித்து திருமங்கலத்தில் புதிய ஃ பார்முலாவை உருவாக்கிய திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியே பாராட்டினார்.
தினகரனின் ஆதரவு MLA’க்கள் பதினெட்டு பேரை நீக்கியது, தினகரனிடம் தோற்றது, தினகரனுக்கு ஆதரவாக தேர்தலில் உள்ளடி பார்த்தது என தொடந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறது ஆளும் அதிமுக அரசு. என்னதான் ஒன்றரை கோடி தொண்டர்கள் அதிமுக பக்கம் தான் இருக்கிறார்கள் என எடப்பாடி அண்ட் பன்னீர் அணியினர் சொல்லிவந்தாலும் ஸ்லீப்பர் செல்ஸ் என நாளுக்கு நாள் தினகரனின் ஆதரவாளர்களை களை எடுத்து வருக்கின்றனர்.ஆர்.கே.நகர் வெற்றிக்குப்பின் ரொம்பவே உற்சாகத்தில் இருக்கும் தினகரனோ 100 சதவிகித கட்சித் தொண்டர்களும் நம் பக்கம் வர இருக்கிறார்கள்' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார்.
இந்நிலையில், ‘உள்ளாட்சித் தேர்தலில், தீயா வேலை செய்ய உருவாக உள்ளது 'தீந்தமிழன் தினகரன் பேரவை' என்ற புதிய அமைப்புக்கான உறுப்பினர் சேர்க்கை வேலைகள் தீவிரமடைந்துள்ளன' என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.
இந்த இடைப்பட்ட நேரத்தில், கடந்த சில நாட்களாக நடந்துவரும் சட்டசபையில் தனி ஒருவனாக இருந்து ஆளும் கட்சியை அலற விடுகிறார். 'என்னைப் பார்த்ததும் யாருக்கும் தெரியாமல் அமைச்சர் ஒருவர் வணக்கம் வைத்தார்' எனக் கொளுத்திப் போடுவதும், 'நான் பேசுவதற்கு சபாநாயகர் வாய்ப்பு அளிக்கவில்லை', என்னைப் பார்த்ததும் இரண்டு MLA’க்கள் ஓடிவிட்டனர், தலையை குனிந்து கொண்டே மேஜையை தட்டுகின்றனர் என்றும் பன்னீர் பக்கம் பாயும் போது சார் சார்னு கூடவே வருவது நியாபகம் இல்லையா? நீ எதுக்கு தர்மயுத்தம் ஆரம்பித்திங்கனு எல்லோருக்கும் தெரியும் என சபை முடிந்து வெளியில் வரும் அவர் பேட்டி என்ற பெயரில் எல்லோரையும் கலாய்ப்பது வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சென்னை உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பேச்சாளர்கள் என எல்லோருடனும் கலந்து பேசியிருக்கிறார். ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார். “ஆர்.கே.நகர் வெற்றி ஒரு டிரெய்லர் தான் வரும் உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் இம்ப்ளிமென்ட் செய்யணும் தினகரனின் நோக்கம். 'உள்ளாட்சித் தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி அணி தோல்வி அடைந்துவிட்டால், அவரிடம் இருக்கும் இதர நிர்வாகிகள் நம்பக்கம் வந்துவிடுவார்கள். மொத்த கட்சியும் நம்முடைய கைக்கு வந்துவிடும் என நம்பிக்கையாக பேசியிருக்கிறார்.
“உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க நமக்கு ஒரு பெயர் வேண்டும் அதற்கு ஒரு கட்சி அவசியம். ஆர்.கே.நகரிப்போல சுயேச்சை என்ற அடையாளத்தோடு தனி சின்னம் இல்லாமல் போட்டியிட்டால் மக்கள் மனதில் பதிய வைக்க முடியாது. ஆர்.கே.நகர் என்பது ஒரு தொகுதி தான். அதனால் என்னுடைய பெயர் ஏதாவது சின்னம் இருந்ததாலே நடந்தது. ஆனால் தமிழகம் முழுவதும் களமிறங்கும் போது நமக்காக தனி சின்னம் தேவை அப்போது தான் சீக்கிரமாக மக்களிடம் சென்றடைய முடியும்.
'தீந்தமிழன் தினகரன் பேரவை' என்ற பெயரில் அமைப்பைத் தொடக்கி மாநிலத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருந்தால், ஏதேனும் ஒரு சின்னம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எடப்பாடியும் பன்னீர்செல்வமும் நீதிமன்றம் சென்று சின்னத்தை வாங்கி விடலாம். ஆக, மக்கள் மத்தியில் தினகரன் பெயரைக் கொண்டு செல்வதற்கும் இந்தப் பேரவை பயன்படும்" இன்னும் இரண்டு மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதால் தீயா வேலை செய்யணும் என சில ஐடியாக்களையும் வழங்கியுள்ளாராம்.