சாதகமான தீர்ப்பு  வரப்போகுது! அப்புறம் காட்டுறோம் நாங்க யாருன்னு! தாறுமாறாய் ஆவேசமான தங்க.தமிழ்செல்வன்!

First Published Jan 8, 2018, 1:03 PM IST
Highlights
TTV Dinakaran support mla Thanga.Thamilselvan pressmeet


தினகரனுக்கு ஆதரவு அளித்து புதுச்சேரி, குடகு என ‘கூவத்தூர் சீசன் 2’ வை நடத்திய எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து இவர்கள் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் உள்ளது.

இந்நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத் தொடர் துவங்கியிருக்கும் நிலையில் அவர்களில் சில எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வந்தனர். ஆனால் அவர்களை சபை வாசலிலேயே நிறுத்திய காவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. 

இச்சூழலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் முக்கியமானவரான தங்க.தமிழ்செல்வன், சபைக் காவலர்களிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாங்க எம்.எல்.ஏவா? இல்லையாங்கிற வழக்கு கோர்ட்டுல இருக்குது. இந்த நிலையில எங்களை உள்ளே வரக்கூடாதுன்னு சொல்ல நீங்க யார்? என்று சபை காவலர்களிடம் அவர் கேட்டபோது ’உங்களை உள்ளே அனுமதிக்கக் கூடாதுன்னு சபாநாயகரிடமிருந்து வாய்மொழி உத்தரவு என்று பதில் வந்தது.

இதில் கொதித்துப்போன தங்கத்தமிழ்செல்வன் “எங்களோட வழக்குல நாளைக்கு இறுதி நாள் தீர்ப்பு வரப்போகுது. நிச்சயம் எங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். அதைத்தொடர்ந்து நாங்க சபைக்குள்ளே வந்து உட்காருவோம். அப்போ இந்த எடப்பாடியும், பன்னீரும், சபாநாயகரும் எங்களுக்கு பதில் சொல்லியே ஆகணும். 

இது ஜனநாயக நாடா இல்ல சர்வாதிகார நாடாய்யா?” என்று கொதித்திருக்கிறார். 
தீர்ப்பு எப்படி இருக்குமோ!?
 

click me!