
ஜெயலலிதா உருவாக்கித் தந்த ஆட்சி என்பதையே மறந்து விட்டு வடக்கு நோக்கி கைகூப்பி கும்பிடுபோட்டு ஆட்சி நடத்துவதற்கு வெட்கமாக இல்லையா என இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பை டி.டி.வி.தினகரைன் கலாய்த்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்ற பெயரில் பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து மாவட்ட வாரியாகப் தொண்டர்களை சந்திக்கிறார், இந்த பயணத்தை தஞ்சையிலிருந்து தொடங்குகிறார் தினகரன்.
இந்நிலையில் திருவள்ளூர் அருகே டி.டி.வி.தினகரன் பங்கேற்ற மிபமாண்டமான கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்த்த அனைத்து திட்டங்களையும், இபிஎஸ் அரசு கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.
மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை ஜெ. கடுமையாக எதிர்த்த நிலையில் அத்திட்டங்கள் தற்போது எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருவதாக் குற்றம்சாட்டினார்.
தற்போதுள்ள ஆட்சியாளர்கள் வடக்கு நோக்கி கும்பிடுபோட்டு பயந்துபோய் ஆட்சி நடத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டிய டி.டி.வி.தினகரன், இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என தெரிவித்தார்.