
தமிழக அரசியல் களத்தில் முதல் பாலிலேயே சிக்சரடித்த தினகரன், டிவிட்டரிலிருந்து மக்களை சந்திக்க களமிறங்கும் கமலுடன் நேரடியாக மோதத் தயாராகி விட்டார் தினகரன். இதற்காக மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்ற பெயரில் பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து மாவட்ட வாரியாகப் தொண்டர்களை சந்திக்கிறார், இந்த பயனத்தை தஞ்சையிலிருந்து பயணம் தொடங்குகிறார் தினகரன். இதேபோல, “பிப்ரவரி 26-ம் தேதி கலாம் வீட்டில் இருந்து ‘நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார்.
எப்போ ஆரம்பித்தது இந்த சண்டை? எதற்காக பரமக்குடியோடு மல்லுக்கு நிற்கிறது மன்னர்குடி?
திருடனிடம் பிச்சை எடுக்கலாமா?
சென்னை மழை வெள்ளத்தில் ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் செயல்பாடுகளை மெச்சிய கமல் ஹாசன், இடைத்தேர்தலில் 20 ரூபாய் டோக்கன்களுக்கு தொகுதிவாசிகள் விலைபோயுள்ளதாகவும், அதுவும் திருடனிடம் பிச்சை எடுப்பதுபோன்ற ஒரு கேவலம் எங்கேயாவது உண்டா என்றும் கமல் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், டோக்கன்கள் தற்காலிக இன்பம் மட்டுமே அளிக்கும் என்றும், வாக்குகளே நீண்டநாள் நிலைத்த பலனைத்தரும் என்றும் அதுமட்டுமல்லாமல், ஆளுங்கட்சியின் திருடன் - திருடன் விளையாட்டை எப்போது முடிவுக்குக் கொண்டு வரப்போகிறீர்கள் என்று தினகரனையும் அவரது வெற்றியையும் கடுமையாக விமர்சித்தார்.
இதற்க்கு பதிலடி கொடுத்த தினகரன், ஆர்.கே. நகர் மக்கள் பணத்துக்கும், 20 ரூபாய் டோக்கனுக்கும் விலைபோய்விட்டதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மேலும், பணத்தின் மூலம் நான் வெற்றி பெற்றதாக அவர் கூறுகிறார். அவரது வாதத்தின்படி பார்த்தாலும் ரூ.6 ஆயிரம் பணம் கொடுத்தவர்கள் தானே வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதன் மூலம் ஆர்.கே.நகர் வாக்காளர்களை கமல் அவமரியாதை செய்கிறார்.
என்னிடம் யாரும் பணமும் கேட்கவில்லை, நானும் கொடுக்கவில்லை. நடிகர் விஷாலுக்கு இருந்த தைரியம் கூட நடிகர் கமலுக்கு இல்லை. கமல்ஹாசன் களத்துக்கு வந்து பேச வேண்டும். வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது முறையல்ல என்றும், கமல்ஹாசன் நல்ல நடிகர், நல்ல சிந்தனையாளர் என இதுநாள் வரை நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், “நான் அரசியலுக்கு வருவேன்.. வந்துவிட்டேன்..” என டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் அவர், ஏன் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கவில்லை. கமல் என் மீது அவதூறு கருத்து கூறியதால் அவர் மீது வழக்கு தொடர வேண்டும் என்ற எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. தான் ஒரு பாப்புலர் நடிகர் என்பதைக் காட்டி அரசியல் தெரியாமல் அரசியலில் சடுகுடு ஆட நினைக்கிறார் என காட்டமாக பேசினார்.
‘நாளை நமதே’
இதனையடுத்து, இந்த பொலிடிகல் ஸ்டண்ட் முடிந்த நிலையில், “பிப்ரவரி 26-ம் தேதி கலாம் வீட்டில் இருந்து ‘நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கப் போவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார். மாவட்ட ரசிகர்களிடம் பேசிய கமல், நீங்கள் சினிமா பார்த்து ரசித்து எனக்கு ரசிகர்களாக மாறியவங்க. இப்போ நாம எடுத்து வைக்கப்போற அடுத்த அடி சினிமா இல்லை அரசியல். சினிமா மாதிரி இங்கே படம் ரிலீஸ் ஆகும்போது மட்டும் தியேட்டருக்குப் போய்ட்டு கத்திட்டு வர வேலை இல்லை இது. நீங்க முழு அர்ப்பணிப்போடு வேலை செய்யணும்.
இதுவரைக்கும் மன்றத்தில் ஆட்களை கூப்பிட்டு நம்ம மன்றத்துல சேருங்கன்னு அஒல்லல ஆனால், இனி அப்படி இருக்க முடியாது. சாமானிய மக்களையும் நம்ம மன்றதுகுள்ள கொண்டு வாங்க, நான் உங்களோடுதான் பேச முடியும். நீங்கதான் மக்களோடு பேச முடியும். நிறைய பேசுங்க... என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்பியிருக்கிறார்.
மன்னார்குடியிலிருந்து... ...‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’
‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்று பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து மாவட்ட வாரியாகப் புறப்படுகிறார் தினகரன். தஞ்சையிலிருந்து பயணம் தொடங்குகிறது. இதில் முக்கிய மான விஷயம் என்னன்னா? ‘கமலுக்கு முன்னாடி நாம பயணத்தைத் தொடங்கிடணும்’ என்று சொல்லித்தான் 2ஆம் தேதி நாள் குறித்திருக்கிறார் தினகரன். சசிகலாவின் மாவட்டமான தஞ்சையிலிருந்து தொடங்கலாம் என்பதுதான் தினகரன் திட்டம்.
இந்தப் பயணத்தில், ஆழ்வார் பேட்டை ஆண்டவரை அட்டாக்கையும் தனது பேச்சில் எடுத்து வைக்கப்போகிறாராம். தனது அரசியல் பயணத்தில் கமலின் குறுக்கீடு அதிகம் இருக்கும் என நினைக்கிறாராம் தினா. ஆக, தனது பொலிடிக்கல் ஸ்டண்ட்டை கமலிடம் ஆழ்வார் பேட்டை ஆண்டவரோடு காட்டப் போகிறார் ஆர்.கே.நகர் நாயகன்.