பட்ஜெட் குடும்பங்களுக்கு செம லாபம்!! நிதியமைச்சரின் ஓபன் டாக்

Asianet News Tamil  
Published : Feb 01, 2018, 09:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பட்ஜெட் குடும்பங்களுக்கு செம லாபம்!! நிதியமைச்சரின் ஓபன் டாக்

சுருக்கம்

this budget is for middle class people said finance minister for state pratap

மத்திய பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சரியாக 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கடைசி முழுமையான பட்ஜெட் இதுதான். எனவே இந்த பட்ஜெட்டில் ஏழை, நடுத்தர மக்களை கவரும் விதமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த பட்ஜெட் கவர்ச்சியான அறிவிப்புகளை உள்ளடக்கியதாக இருக்காது. நாட்டின் வளர்ச்சியை முன்னிறுத்திய பட்ஜெட்டாகத்தான் இருக்கும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதித்துறை இணையமைச்சர் பிரதாப் சுக்லா, இந்த பட்ஜெட் நடுத்தர மக்களுக்கான பட்ஜெட்டாக இருக்கும். இதன்மூலம் ஏழை, எளிய மக்கள் அதிகம் பலனடைவார்கள். பட்ஜெட் குடும்பங்களுக்கு அதிக லாபம் அடையும் என தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த பட்ஜெட்டின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

புதுக் கட்சி ஆரம்பிக்கும் காளியம்மாள்..? ரூட் போட்டுக் கொடுத்த பாஜக.. இபிஎஸ் எடுத்த இறுதி முடிவு..!
12,000 அடி உயரத்தில் பதுங்கு குழியில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்..! உயிர் பிழைக்க பதுக்கிய அரசி- மேகி..!