
அரசியல் காழ்ப்புணர்ச்சி கதாரணமாகவே தன் மீது வழக்குகள் போடப்படுவதாக அம்மா அதிமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட டிடிவி தினகரன் தாக்கல் செய்த வேட்புமனு நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அந்நிய செலவாணி வழக்கு, பெரா அபராதம் என பல அஸ்திரங்கள் இவருக்கு எதிராக இருந்தாலும் போட்டியிடுவதற்கு தடை இல்லை என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் புதுத்தெம்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களை டிடிவி தினகரன் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், " ஆர்.கே.நகரில் வீடு எடுத்து தங்கி பரப்புரையில் ஈடுபட உள்ளேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பெரியகுளம் எம்.பி.தேர்தலில் போட்டியிடும் போதும் இதே போன்று திமுக எதிர்த்தது. சட்டப்படியே தேர்தலில் போட்டியிடுகிறேன். விரைவில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பேன்.
இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை காலம் பதில் சொல்லும். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.