தீபா வேட்புமனு ஏற்பு - மகிழ்ச்சியில் தொண்டர்கள்...

First Published Mar 24, 2017, 5:07 PM IST
Highlights
deepa nomination accepted by election commission


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தீபா வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா மறைவினைத் தொடர்ந்து அரசியலுக்குள் நுழைந்தவர் அவரது அண்ணன் மகள் தீபா.அதிமுகவின் தலைமை பீடத்தை சசிகலா ஏற்றதை விரும்பாத அக்கட்சியினர், தீபா பக்கம் சாய்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தொடங்கியவர், 12 ஆம் தேதி நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

இதற்கிடையே தீபா தாக்கல் செய்த மனுவில் அவரது கணவர் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று தகவல் வெளியானது. இதனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. 

இதற்கிடையே நீண்ட பரிசீலனைக்குப் பிறகு தீபாவின் வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இயல்பாக வேட்புமனுவில் சிறிய தகவல் விடுபட்டிருந்தாலும், அந்த மனு நிராகரிக்கப்படும் பட்சத்தில், கணவர் பெயரை குறிப்பிடாத தீபாவின் வேட்பு மனு எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது என சமூக வலைத்தளங்களில் மீம்ஸூகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. 

click me!