
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் டிடிவி.தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக அம்மா என்ற கட்சியின் பெயரில் தொப்பி சின்னத்துடன் டிடிவி தினகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையே டிடிவி தினகரனின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது.
மேலும் சென்னையைச் சேர்ந்த ஜோசப் என்பவர், தினகரின் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியிருந்தார். அதில் அந்நிய செலாவணி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டும் பெரா வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டவருமான தினகரனை வேட்பாளராக அங்கீகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்தச் சூழலில் டிடிவி.தினகரின் வேட்புமனுவை ஏற்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.