
2.0 என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்து வரும் லக்கா நிறுவனம் இலங்கையில் இலவசமாக கட்டித்தரும் வீடுகள் வழங்கும் விழாவில் கலந்த கொள்ள நடிகர் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்கு தொ,திருமாவளவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போருக்குப் பின்னரும் முகாம்களில் வாழ்ந்து வந்த தமிழர்களுக்காக வவுனியா சின்ன அடம்பன் மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் லைக்கா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் 150 வீடுகளை கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ஞானம் அறக்கட்டளை என்பது லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அவர்களின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வீடுகளைப் பயனாளிகளிடம் அளிக்கும் விழா யாழ்ப்பாணதில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஞானம் அறக்கட்டளையினால் கட்டப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு தன் கைகளால் வழங்குகிறார். இதற்காக ரஜினிகாந்த் இலங்கை செல்லவுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்டித்தரும் லைக்கா நிறுவனத்தின் இத்திட்டம் ஒரு ஏமாற்று வேலை என்றும், அதற்கு ரஜினிகாந்த் துணைபோகக் கூடாது என கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் இலங்கை செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.