தகுதியே இல்லாத சமக வேட்பாளரை நிராகரித்த தேர்தல் அதிகாரி...!!!

Asianet News Tamil  
Published : Mar 24, 2017, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
தகுதியே இல்லாத சமக வேட்பாளரை நிராகரித்த தேர்தல் அதிகாரி...!!!

சுருக்கம்

Samaga candidate who is not capable of returning officer rejected

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அந்தோணி சேவியர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரின் வேட்பு மனு நிராகரிக்க படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமத்துவ மக்கள் கட்சியின் மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது.

இதில் சசிகலா தரப்பில், டி.டி.வி. தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், தீபா பேரவை சார்பில் தீபாவும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், சமக சார்பில் அந்தோணி சேவியரும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 127 பேர் மனுதாக்கல் செய்தனர்.

இதற்கான மனு பரிசீலனை ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சமக வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமக மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!