
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பின் அதிமுக வை பொது மக்களே முடக்கிவிடுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடியாக தெரிவித்தார்.
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக.வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பது அனைவக்கும் தெரிந்தது தான் என கூறினார்.
அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, தீபா அணி என மூன்றாக பிரிந்து கிடக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நமக்கெல்லாம் தெரியாமல் எத்தனை அணிகள் உள்ளதோ என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இப்படி பகிரங்கமாக அதிமுக வில் நடக்கும் கோஷ் சண்டையால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது என்று தெரிவித்த அவர், நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு பின் அதிமுகவை பொது மக்களே முடக்கிவிடுவார்கள் என தெரிவித்தார்.
சசிகலாவுக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது. இந்நிலையில் திடீரென அதிமுக வேட்பாளராக நிறுத்தக்பட்டுள்ள டி.டி.வி.தினகரன், வரலாற்று வெற்றியை அல்ல வரலாற்று தோல்வியையே பெறுவார் என தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு தினகரன் அன்னிய செலவாணி மோசடி வழக்கில் சிறைக்குதான் போவார் என்றும் சட்டசபைக்கு உறுதியாக போக மாட்டார் என்றுத் தெரிவித்தார்.
சசிகலாவைப்போல் தினகரனாலும் இனி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிச்சயம் வரும் என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.