
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், காலியாக இருந்த ஆர்கே நகர் தொகுதிக்கு இடை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 12ம் தேதி நடத்தப்படும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் லோகநாதன், தேமுதிகவில் மதிவாணன், பாஜகவில் கங்கை அமரன் ஆகியோர் உள்பட 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் திமுக மருதுகணேஷ், தேமுதிக மதிவாணன், கம்யூனிஸ்ட் லோகநாதன், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம், பாஜக கங்கை அமரன் ஆகியோர மனு பரிசீலனை முடிந்து ஏற்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் ஓ.பி.எஸ். அணியை சேர்ந்த மதுசூதனன், சசிகலா அணியை சேர்ந்த தினகன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இன்று மதியத்துக்கு மேல் இவர்களது மனுக்கள் குறித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தற்போது, ஆர்கே நகர் தொகுதியில் 64 பேருக்கு மேல் களத்தில் உள்ளதாக தெரிகிறது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த இயலாது.
இதையொட்டி, ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 4 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால், வாக்குச்சீட்டுக்கு வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.