நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன்"-தில்லாக பேசும் தினகரன் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில்அரசியல் சூழ்நிலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக தொடர்ந்து குழப்பம் நிலவி வருகிறது .இந்நலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், எடப்பாடிக்கு பதில் கொடுக்கும் வகையில், " நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன்" எனவும், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரை முதல்வராக தேர்ந்தெடுத்த சசிகலாவுக்கு துரோகம் செய்தவர். முதல்வர் தரப்பினர் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார் .மேலும், பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்து ஒன்றும் நான் சிறை செல்லவில்லை. என்மீது சுமத்தப்பட்டுள்ள சில வழக்குகள் காரனமாகத்தான் சிறைக்கு சென்றேன் என குறிப்பிட்டார். அதாவது எடப்பாடி அணியும், தினகரன் அணியும் மாறி மாறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்அதில் குறிப்பாக தற்போது, வீட்டுக்கு அனுப்புவோம் என்ற வார்த்தை அரசியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது