வேலை பார்க்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லனா… ரெசார்ட்டில் தங்கியிருக்கிற குதிரைபேர எம்.எல்.ஏக்களுக்கு எதற்கு? கமல் பளார்..!வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுபோலவே மக்கள் பணி செய்யாமல் ரெசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும் என நீதிமன்றத்திற்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்திற்கும் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் இருப்பதற்கும் கண்டனத்தை தெரிவித்த நீதிமன்றம், அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தது. இதையடுத்து பணிக்குச் செல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், வேலைக்கு செல்லவில்லை என்றால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கப்படாது என்றால் மக்கள் பணி செய்யாமல் ரெசார்ட்டில் தங்கியிருக்கும் குதிரைபேர எம்.எல்.ஏக்களுக்கு எதற்கு சம்பளம் என கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், மக்கள் பணி செய்வதை விடுத்து ரெசார்ட்டில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏக்களையும் கண்டிக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.