தமிழகத்தில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் தமிழகத்தில் புதிய தொழில் நகரம் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு, குஜாரத் ராஜஸ்தான், ஆந்திர, உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள சில முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்று வரும் இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில் மோடி இவ்வாறு தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் முதலீட்டை பெருக்குவதற்கு ஜப்பான் முன்வரவேண்டும் எனவும், இதனால் பெருமளவில் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எனவும் பேசினார்.தொடர்ந்து பேசிய மோடி,தொழில் திறன் வாய்ந்த மனித ஆற்றல் இந்தியாவில் அதிகம் உள்ளது என்பதால் , ஜப்பான் அதிகளவில் லாபம் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.மத்திய அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்திற்கும்,தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் ஒரு அதிரடியாக பிரதமர் மோடி அறிவித்த இந்த அறிவிப்பு தமிழக மக்களிடேயே வரவேற்பை பெறுமா ? அல்லது இதனையும் மக்கள் எதிர்பார்களா என்ற நிலை உருவாகி உள்ளது