துரோகிக்கு துரோகி பதவி வழங்குகிறார்....! எல்லாம் சுயநலமே...! - தெறிக்கவிடும் டிடிவி...! 

 
Published : Jan 04, 2018, 12:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
துரோகிக்கு துரோகி பதவி வழங்குகிறார்....! எல்லாம் சுயநலமே...! - தெறிக்கவிடும் டிடிவி...! 

சுருக்கம்

ttv dinakaran says The traitor presents the traitor

துரோகிக்கு துரோகி பதவி வழங்குகிறார் எனவும் எல்லாம் சுயநலமே எனவும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.

இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. 

இதனிடையே ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஒபிஎஸ்க்கு வழங்கப்பட்ட அவை முன்னவர் பதவி செங்கோட்டையன் வகித்து வந்தார். 

இந்நிலையில், வரும் 8 ஆம் தேதி சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அவை முன்னவராக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவை முன்னவர் பதவி என்பது சட்டப்பேரவையை பொறுத்தவரை மிக முக்கியமான பதவி என்பதால் பன்னீர்செல்வத்திற்கு மேலும் மேலும் முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றது என்றே கூறலாம். 

இதைதொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன், துரோகிக்கு துரோகி பதவி வழங்குகிறார் எனவும் எல்லாம் சுயநலமே எனவும் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!