
ஆர்.கே. நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் சூறாவளியாக சுற்றி, தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி அதிமுகவின் அதிமுக அம்மா கட்சி வேட்பாளா டி.டி.வி தினகரன் ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "அதிமுக புரட்சித் தலைவி கட்சி வேட்பாளர் மதுசூதனனுக்கு மின் விளக்கு தான் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை இரட்டை மின் விளக்கு என மாற்றி வைத்துள்ளனர்.
பொதுமக்களிடம், இரட்டை மின்விளக்கு என கூறி, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் சின்னத்தை இரட்டை இலை போல, மின் விளக்கு சின்னத்தை வடிவமைத்து இருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது.
அதை நான், டெல்லி தலைமைக்கும், தேர்தல் அதிகாரிக்கும், மதுசூதனனின் சின்னத்தை முடக்க வேண்டும் என மனு கொடுக்க இருக்கிறேன். இதற்கு விரைவில் முடிவு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.