
டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் மனு அளிக்கப்பட்டது. அதில் அந்நிய செலவாணி வழக்கு, பெரா வழக்கில் அபராதம் ஆகியவற்றை சுட்டிக் காட்டப்பட்டிருந்த
ஆனால் இதனை ஏற்காத தேர்தல் ஆணையம் நீண்ட பரிசீலனைக்குப் பின்னர் தினகரனின் வேட்புமனுவை ஏற்பதாக அறிவித்தது.
இதற்கிடையே டிடிவின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்று பேர் மனு தாக்கல் செய்தனர். இதனை அவசர வழக்காக எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்துகிறது.
தீவிர பிரச்சாரத்தில் இருக்கும் டிடிவி தினகரனுக்கு இந்த மனுக்குள் பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர் விடமறிந்தவர்கள்.