"தொப்பி" தினகரனுக்கு அடி மேல் அடி... அந்நிய செலவாணி வழக்கில் நீதிமன்றம் குட்டு

 
Published : Mar 27, 2017, 11:40 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
"தொப்பி" தினகரனுக்கு அடி மேல் அடி... அந்நிய செலவாணி வழக்கில் நீதிமன்றம் குட்டு

சுருக்கம்

high court rejects dinakaran petition

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை அந்நிய செலாவணி வழக்கை ஒத்திவைக்கக் கோரி தினகரன் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1996-97ம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன், பாஸ்கரன் ஆகியோர் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் பணப்பரிவர்த்தனை செய்தனர். எந்த ஆவணமும் இல்லாமல் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக எழுந்த புகாரின் பேரில்  3 பேர் மீதும் அமலாக்க பிரிவினர் அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்தனர்.  

டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள வங்கிகள் மூலம் வெளிநாட்டு கரன்சியை மாற்றியது என 2 வழக்குகள் தினகரன் மீது போடப்பட்டது. 

இவ்வழக்கில் இருந்து சசிகலா தினகரன் ஆகியோரை விடுவித்த எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் ,  எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தததோடு, விசாரணையை எதிர்கொள்ளும்படி சசிகலா தினகரனுக்கு உத்தரவிட்டது. 

இவ்வழக்கு விசாரணை கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணி காரணமாக தனக்கு ஒரு நாள் கால அவசாகம் வேண்டும் என்று தினகரன் சார்பில் வாதாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஒரு நாள் அவகாசம் அளித்தது. இதற்கிடையே ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் முடியும் வரை அந்நிய செலாவணி வழக்கை ஒத்திவைக்கும் படி கடந்த 24 ஆம் தேதி தினகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இம்மனு மீதான விசாரணை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தினகரினின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்