அக்ரஹார சிறையில் சசிகலா மவுன விரதமாம்...! ஏன் தெரியுமா...?

 
Published : Dec 28, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
அக்ரஹார சிறையில் சசிகலா மவுன விரதமாம்...! ஏன் தெரியுமா...?

சுருக்கம்

ttv dinakaran says sasikala silent fasting in jail

சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாகவும் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு மவுன விரதம் இருப்பதாகவும் சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 75 நாட்களாக சிறையில் இருந்த அவரை பார்க்க சசிகலா யாரையும் அனுமதிக்கவில்லை. 

இதனால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலை கொண்டது. இதனிடையே ஜெயலலிதாவை சந்தித்தாகவும் அவர் உணவு உட்கொண்டதாகவும் அமைச்சர்கள், செய்திதொடர்பாளர்கள் என அனைவரும் கூறி வந்தனர். 

ஆனால் நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டது. 

இதையடுத்து ஜெ இடத்திற்கு சசிகலா பிடிக்க முற்பட்டார். அதன்படி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆதே போன்று ஆட்சியையும் பிடிக்க முயன்றார். இதனால் ஒபிஎஸ் ஆத்திரம் அடைந்து கட்சியை உடைத்தார். 

இதையடுத்து சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி ஒபிஎஸ்சுடன் கைகோர்த்து சசிகலா குடும்பத்தை ஒதுக்கினார். 

இதனிடையே சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

இதைதொடர்ந்து ஜெயலலிதா எம்.எல்.ஏவாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றது. இதில் சசிகலா ஆதரவாளர் டிடிவி தினகரன் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இந்நிலையில் இன்று சிறையில் இருந்த சசிகலாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறையில் சசிகலா மவுன விரதம் இருப்பதாகவும் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு மவுன விரதம் இருப்பதாகவும் தெரிவித்தார். 

வரும் ஜனவரி மாதம் கடைசி வரை இந்த மவுன விரதம் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!