
ரெய்டின் போது தில்லாக தினகரன் அளித்த பேட்டியை கலைஞர் டி.வி. ஒளிபரப்பியது. அதேபோல் மோடி கருணாநிதியை சென்று சந்தித்ததை ஜெயா செய்தி ஒளிபரப்பியிருந்தது. ஆக பரஸ்பரம் இந்த உதவி ஸ்டாலின் - தினகரனின் அண்டர்கிரவுண்ட் கூட்டின் வெளிப்பாடா என்று விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் இதுபற்றி பேசியிருக்கும் தினகரன் “தி.மு.க.வுடன் நாஙக்ள் சேர்வது என்பது தற்கொலைக்குச் சமமானது. அதேபோல எங்களுடன் ரகசியக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு இல்லை (ப்பார்றா! ஸ்டாலின விட்டுக் கொடுக்காம பேசுறாப்ல). அம்மாவின் மரணத்துக்கு சின்னம்மாதான் காரணம் என்று எப்படி வதந்தி கொளுத்திப் போட்டார்களோ அதேபோல்தான் இந்த வதந்தியையும் கொளுத்தியிருக்கிறார்கள்.
நான் ஸ்டாலினை நேரில் பார்த்தே பல வருடங்கள் ஆகின்றன (மொபைலுன்னு ஒண்ணு எதுக்கு இருக்குது தல, தூது போகும் மீடியேட்டர் டீம் அப்படின்னு ஒரு கூட்டம் எதுக்கு இருக்குது பாஸ்?). அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் எனும் கொள்கையுடன் தி.மு.க. செயல்படுகிறது. ஏற்கனவே பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க பார்த்தவர்கள்தானே! இப்போது மக்கள் விரோத மற்றும் துரோக ஆட்சியான எடப்பாடி ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நாங்கள் கவர்னரிடம் மனு கொடுத்திருப்பதால் எங்களுடன் அவர்களாகவே சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க நினைக்கிறார்கள். எங்களின் நோக்கமும், தி.மு.க.வின் நோக்கமும் இந்த ஒரு விஷயத்தில் ஒன்றாக இருக்கிறதே தவிர மற்றபடி அவர்களோடு எந்த தொடர்பும் எங்களுக்கு இல்லை.
சமீபத்தில் கூட சின்னம்மாவை சிறையில் பார்த்தேன். தமிழக அரசியலில் நடக்கும் எல்லாவற்றையும் சின்னம்மா கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். டி.வி. பார்க்கிறார், பேப்பர் படிக்கிறார், இதன் மூலம் இங்கிருக்கும் அரசியலை அறிந்து வைத்திருக்கிறார். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தமிழக அரசியலை கவனித்து வைக்கிறார்.
எங்களுக்கு துரோகம் இளைத்த எவரும் தப்பிவிட முடியாது. காலச்சக்கரம் ஓட ஓட எல்லாம் மாறும்.” என்று கர்ஜித்திருக்கிறார் தினா.