கட்சி கொறடாவே எங்கள் பக்கம்...! திகில் கிளப்பும் தினகரன்...!

 
Published : Nov 08, 2017, 03:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
கட்சி கொறடாவே எங்கள் பக்கம்...! திகில் கிளப்பும் தினகரன்...!

சுருக்கம்

TTV Dinakaran said that the party is with us and that the ops and his supporting MLAs will be disqualified.

கட்சி கொறடாவே எங்களுடன் தான் இருக்கிறார் எனவும் ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வழக்கு விசாரணை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. 

இதுவரை 6 கட்ட விசாரணை நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட விசாரணை இன்று நடைபெறுகிறது. 

இதனிடையே சசிகலாவிடம் பிரிந்து சென்ற ஒபிஎஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் டிடிவிக்கு ஆதரவாக சென்ற எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து எடப்பாடி அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலாவை டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி கொறடாவே எங்களுடன் தான் இருக்கிறார் எனவும் ஒபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி எனவும் தெரிவித்தார். 

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை சரியான பாதையில் தான் செல்கிறது எனவும் இரட்டை இலை எங்களுக்கே கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!