
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் கற்றுக்கொண்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்தி, மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினார். தமிழ் கற்றுக்கொண்டால் தமிழக மக்களுடன் தொடர்பு கொள்வது எளிமையாக இருக்கும் என்பதால் செம்மொழியான தமிழ் மொழியை கற்றுக்கொள்ள விரும்பினார்.
இதையடுத்து தமிழாசிரியர் ஒருவர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு தமிழ் கற்றுக்கொடுக்கிறார் என ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியை கற்க விரும்புவதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.