
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் என்றும் இந்த இடைத் தேர்தலோடு ஓபிஎஸ் காணாமல் போய்விடுவார் என்றும் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், அதிமுக ஆட்சிமன்றக் குழு நாளை கூடி, ஆர்.கே.நகர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியை அகற்றுவதற்காக மு.க.ஸ்டாலின் செய்யும் அடாவடி செயல்களை பொறுக்க முடியாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து வெளியேற நினைப்பதாகவும் தினகரன் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் ஓபிஎஸ் அந்த சின்னத்தில் போட்டியிட நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது என கூறினார்.
மேலும் ஓபிஎஸ் இது குறித்து பகல் கனவு காணுவதாகவும் தினகரன் குறிப்பிட்டார். வேண்டுமானால் வேறு ஏதாவது மாநிலங்களுக்குச் சென்று சுயேட்சையாக இரட்டை இலை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டிடட்டும் என தினகரன் கூறினார்.