எடப்பாடி தொகுதியிலேயே சரிகிறது கூடாரம் – தொடர்ந்து செக் வைக்கும் செம்மலை

Asianet News Tamil  
Published : Mar 14, 2017, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
எடப்பாடி தொகுதியிலேயே சரிகிறது கூடாரம் – தொடர்ந்து செக் வைக்கும் செம்மலை

சுருக்கம்

edappadi admk cadres joined with ops

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியிலிருந்து சசிகலா பிரிவை சேர்ந்த 250 அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ்சிடம் அடைக்கலம் ஆனதால் ஆளும் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது .

சேலம் மாவட்டம் எடபப்டி தொகுதியிலிருந்துதான் முதல்வர் பழனிச்சாமி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கபட்டார்.

பலமுறை எம்எல்ஏவாக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதிமுக கோட்டையாக அதை மாற்றி வைத்திருந்தார்.

முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதிக்குட்பட்ட 250க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் இன்று காலை திடீரென ஓபிஎஸ்சின் சென்னை வீட்டிற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

முதலமைச்சரின் தொகுதியிலிருந்தே பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஓபிஎஸ்சிடம் அடைக்கலமாகி வருவதால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது சசிகலா அணி.

பழனிச்சாமியின் தொகுதியிலிருந்து அதிருப்தியாளர்கள் ஒபிஎஸ்சிடம் இணைவதற்கு முக்கிய காரணமே அவரது அரசியல் எதிரியான செம்மலை தான் என கூறப்படுகிறது.

கூவத்தூரில் சசிகலா அணியில் நீடித்து வந்த செம்மலை எடப்பாடி  முதல்வராக போகிறார் என்ற தகவலுக்கு பின்பு தான் ஓபிஎஸ்சிடம் அடைக்கலம் ஆனார்.

எடப்பாடியை நேரடியாக எதிர்க்கும் செம்மலை அவது தொகுதிக்கு உட்பட்ட ஜலகண்டாபுரம், தாரமங்கலம், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 250 கிராம அளவிலான நிர்வாகிகளை ஓபிஎஸ்சிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சரும் தற்போதய மேட்டூர் எம்எல்ஏவுமான செம்மலை, வீரபாண்டிய ஆறுமுகத்தின் பங்காளியும் முன்னாள் எம்எல்ஏவும் தற்போதய அதிமுக அமைப்பு செயலாளருமான எஸ்கே செல்வம், அவரது ஒன்று விட்ட சகோதரி முன்னால் அமைச்சருமான விஜயலட்சுமி பழனிசாமி ஆகியோரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அந்த மாவட்டத்தில் களத்தில் குதித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

Sanatana Dharma: சனாதனத்தை ஒழிக்கவே வந்துள்ளோம்.. தவெக எம்.எல்.ஏ முஸ்தபா பேச்சு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
DA Hike: அடுத்தடுத்து சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்..! அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 60% உயர்வு..