சசிகலாவை நீக்குவோம்னு சொன்ன வைத்தியலிங்கம் கட்சியிலிருந்து நீக்கம்... - டிடிவி தினகரன் அதிரடி...

 
Published : Aug 22, 2017, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
சசிகலாவை நீக்குவோம்னு சொன்ன வைத்தியலிங்கம் கட்சியிலிருந்து நீக்கம்... - டிடிவி தினகரன் அதிரடி...

சுருக்கம்

ttv dinakaran order to vaiththiyalingam removed from admk party

சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என கூறிய வைத்தியலிங்கம் எம்.பியை கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன. பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமை அலுவலகம் சென்ற ஒபிஎஸ் அங்கு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து ஒன்றாக இணைந்ததாக அறிவித்தார். 

மேலும் அங்கு ஒபிஎஸ்க்கு துணை முதலமைச்சர் பதவியும், கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் வைத்தியலிங்கம் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி அறிவித்தார். 

இதைதொடர்ந்து சசிகலாவை நீக்க விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என வைத்தியலிங்கம் எம்.பி தெரிவித்தார். 
இந்நிலையில், சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என கூறிய வைத்தியலிங்கம் எம்.பியை கட்சியில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!