
திருநெல்வேலி
இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் டிடிவி தினகரன் முதல்வர் ஆவார் என்று அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான இசக்கி சுப்பையா கூறினார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான இசக்கி சுப்பையா.
அப்போது அவர், "அதிமுக யார் கையில் இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும். அதற்கு ஆர்.கே.நகர் சட்டபேரவைத் தேர்தல்தான் சிறந்த உதாரணம்.
1972-ல் நடைப்பெற்ற இடைத்தேர்தலிலில் எம்.ஜி.ஆர் வெற்றிப் பெற்றார். அதன்பின் அவர் முதலமைச்சர் ஆனார்.
1989-ல் மதுரை மற்றும் மருங்காபுரி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.
அதுபோல, வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தினகரன் வெற்றிப் பெற்று முதலமைச்சராவது உறுதி.
மீண்டும் அம்பாசமுத்திரத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், யார் வெற்றிப் பெறுவது என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
அதிமுகவிலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. ஆதிக்க சக்தி எதிர்ப்புகளை போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறோம்.
இப்பொழுது நடைபெறும் ஆட்சி குறித்து எதுவும் கூற விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.